அதிமுகவை தனிமைப்படுத்தினால் அவர்கள் வேறு வழியில்லாமல் தங்களுடன் வருவார்கள் என்ற நெருக்கடியை பாஜக உருவாக்கி வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஒசூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறதா அல்லது தனித்தன்மையை காப்பார்களா என்பது தான் சவாலாக உள்ளது என்றார்