அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த கட்சியின் முன்னாள் நிர்வாகி செங்கோட்டையனை சந்திக்க பாஜக தயாராக இல்லை என தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முடிவில் பாஜக தலைமை தெளிவாக உள்ளது என்றும், அமித்ஷா சொல்வதை, தான் தற்போது சொல்கிறேன் பாஜக செங்கோட்டையனை சந்திக்க தயாராக இல்லை என்றார்.