ஈரோட்டில், மத்திய அரசின் திட்டத்தை பயன்படுத்தி கடன் வாங்கி தருவதாக கூறி,பொது மக்களிடம் இ-சேவை மையத்தினர் 10 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக பாஜகவினர் போலீசில் புகார் அளித்தனர். சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் இ சேவை மையத்தில், மத்திய அரசின் திட்டங்கள் பெயரில் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி தருவதாக விளம்பரம் செய்து, அதனை பார்த்து நம்பி வருவோரிடம் பணம் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.