சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இஸ்லாமிய இளைஞரை தாக்கிய பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸார், மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். நரசிங்கபுரம் நகராட்சி நபிகள் நாயகம் தெருவை சேர்ந்த சாதிக், கடந்த 20-ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, வடக்கு தில்லை நகரை சேர்ந்த பாஜக மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு தலைவர் வித்யாபதி, நண்பர்கள் 5 பேரை வரவழைத்து சாதிக்கை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.