மிலாடி நபியையொட்டி கோவை உக்கடம் பகுதியில் உள்ள இஸ்லாமிய அமைப்பு சார்பில் 40 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. உக்கடம், ஜி.எம் நகர்,கோட்டைமேடு,கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்கள் 40 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. இதற்காக 400 ஆடுகள், 2 ஆயிரத்து 500 கிலோ அரிசிஉள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பிரியாணி தயாரிக்கும் பணி நடைபெற்றது.