திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்பட்டதால், புரட்டாசி மாதம் என்று கூட பார்க்காமல் பொதுமக்கள் முண்டியடித்து வாங்கிச் சென்றனர். மணிக்கூண்டு அருகே நந்தகுமார் என்பவர் மகாராஜா பிரியாணி என்கிற பெயரில் புதிய கடையை திறந்த நிலையில், திறப்பு விழா சலுகையாக 100 ரூபாய் பிரியாணி 10 ரூபாய்க்கு வழங்கப்படும் என நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி இருந்தனர். இதனால், காலையிலேயே கடைக்கு முன்பு ஏராளமானோர் திரண்டு காத்திருந்து, திறப்புவிழா முடிந்த பிறகு பிரியாணி வங்கிச் சென்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் நிற்க வைத்து பிரியாணி வழங்கப்பட்டது.