சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணைமேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.