கரூர் திருக்காம்புலியூரில் மேம்பாலத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி, பட்டாசு வெடித்து பட்டாக்கத்தியுடன் அலப்பறை செய்த சிறுவன் உள்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், இதுகுறித்து விசாரித்து அவர்களை கைது செய்த போலீசார், மூன்று கத்திகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதானவர்களில் நான்கு பேர் மீது அடிதடி, கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.