ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில், கூட்டம் கூட்டமாக குவிந்திருக்கும் வெளிநாட்டுப் பறவைகளால், அந்த பகுதியே பறவைகளின் கீச்சொலிகள் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. சரணாலயத்தில் உள்ள கண்மாய் தொடர் மழையால் நீர் நிரம்பி காணப்படும் நிலையில், நடப்பாண்டு இனப்பெருக்கத்திற்காக 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, மஞ்சள் மூக்குநாரை, நத்தைக்கொத்தி நாரை, கரண்டிவாயன் வாத்து உள்ளிட்டவை அதிகளவில் வந்துள்ளன.