சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நிலபரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்காடு சேர்வராயன் வனச்சரகங்களில் நிலப்பரப்பில் வாழும் பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் 3 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும், வன ஊழியர்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 15 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கண்களில் தென்படுகின்ற பறவைகளை புகைப்படம் எடுத்தும், வீடியோவாக பதிவு செய்தும், எத்தனை பறவைகள் உள்ளன என கணக்கெடுத்து வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவிப்பர்.