பறவைகளின் பாதுகாப்பு மற்றும் பரவலை உறுதி செய்யும் வகையில் தமிழகத்தில் அனைத்து வனகோட்டங்களிலும் நீர்நிலை, ஏரி, குளம், கண்மாய், வாய்வெளி உள்ளிட்ட பகுதிகளில் இரைகொல்லிகள் குறித்து கணக்கெடுக்கும் பணி முதல்முறையாக தொடங்கியுள்ளது. இதில் பருந்துகள், பாறுகழுகுகள், வல்லூர்கள், ஆந்தைகள், பூனைப்பருந்துகள், விரால், ரசாளி உள்ளிட்ட இரைகொல்லி பறவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதனடிப்படையில் ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபூதூர் காவல்சுற்றுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வனகாப்பாளர் வனிதாமணி தலைமையில் வனபணியாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு நாட்கள் இரவு பகலாக நடைபெறும் பணியில் இரைகொல்லி பறவைகள் எண்ணிக்கை குறித்தும் எதிர்காலத்தில் மேற்கொள்ளபட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சேகரிக்கப்பட்டு வருகிறது. Related Link பழவேற்காடு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டி