துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாபெரும் பைக் பந்தயம் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் ஏற்பாட்டில் நடந்த பைக் பந்தயத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்த நிலையில், சீறிப்பாய்ந்த பைக்குகளை கூடியிருந்த மக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.