விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே டேங்கர் லாரியின் பின்பக்க டயரில் சிக்கி தலை சிதறி உயிரிழந்த வழக்கறிஞரின் உடலை பார்த்து, மனைவியும், மகளும் கதறி அழுதனர். ராஜபாளையம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த முத்துமணி என்பவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகளை பார்த்து விட்டு பைக்கில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கினார்.