புதுச்சேரி காமராஜர் சாலை அருகே சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது பைக் மோதியதில், இளைஞர் தூக்கி வீசப்பட்டு சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இளைஞர் மனோஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.