செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் குட்கா மற்றும் மாவா ஆகிய போதைபொருட்களை தயாரித்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நுண்ணறிவு பிரிவு போலீசார் அளித்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் சோதனை செய்ததில், பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜித் பண்டிட் என்பவர் போதைபொருட்களை தயாரித்தது தெரிய வந்தது. வாடகைக்கு வீடு எடுத்து போதைபொருட்களை தயாரித்து வந்த அவரிடம், 30 கிலோ குட்கா, இரண்டு கிரைண்டர் மற்றும் இரண்டு மிக்சியை போலீசார் பறிமுதல் செய்தனர்.