சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வசிக்கும் பீகாரை சேர்ந்த குடும்பத்தினர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மகனுக்கு தமிழக மக்கள் உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பீகார் நவடா மாவட்டம், வாரிசாலிஞ்ச் கிராமத்தை சேர்ந்த ஒன் கார் நிராலா ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மகன் சிவனேஷ் நிராலா கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுவனுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சிறுவனின் உயிரை காப்பாற்ற ரூபாய் 35 லட்சம் வரை செலவாகும் என்பதால் தமிழக மக்கள் தங்களுக்கு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.