புதுச்சேரியை அடுத்த தொண்டமாநத்தத்தில் உள்ள ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவையொட்டி அலக்கரிக்கப்பட்டிருந்த ஸ்ரீவெள்ளை விநாயகர், ஸ்ரீகங்கையம்மன், ஸ்ரீஐயனாரப்பன் மற்றும் ஸ்ரீசெங்கழுநீர் அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, நான்கு மாடவீதியில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடத்தை பிடித்து இழுத்தனர். இதனையடுத்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.