திருவாரூரில், மாணவர்களுக்கான மிதிவண்டி ஓட்டும் போட்டியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டி ஓட்டும் போட்டி திருவாரூர் நகராட்சி அலுவலகம் எதிரில், தேரோடும் வீதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், சிறுவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, 5000, 3000, 2000 ரூபாய் என முதல் மூன்று பரிசு வழங்கப்பட்டது.திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கப்பட்ட போட்டியினை, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் கொடியசைத்து தொடக்கி வைத்தார். தெற்கு வீதி, வடக்கு வீதி, கீழ வீதி வழியாக போட்டிகள் நடைபெற்றன. 10 மற்றும் 15 கிமீ தொலைவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.