கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் பகுதியில் உள்ள புவியூர் தேவி முத்தாரம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆயிரத்தெட்டு திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.