தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணியை, இஸ்ரோ பூமி பூஜையுடன் தொடங்கியது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் வந்த பிரதமர் மோடி, ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ராக்கெட் ஏவுதளத்திற்கான பணிகளை, இஸ்ரோ பூமி பூஜையுடன் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ இயக்குநர் ராஜராஜன் தெரிவித்தார்.