ஈரோடு பவானிசாகர் அணை முழு கொள்ளளவான 120 அடி எட்டியதையடுத்து ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் பத்தாயிரம் கனஅடி உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்படும் நிலையில் சீனிவாசபுரம் எக்ஸ்டென்ஷன், சோமசுந்தரபுரம், குப்பம் போன்ற ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.