இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48. பாரதி ராஜா இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற படம் படத்தின் மூலம் மகன் மனோஜ் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தினார். வீட்டில் இருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மனோஜ் உயிரிழந்துள்ளார். அவருடைய உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.