தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் தேர்வு கட்டணமாக ஒரு பாடத்திற்கு 75 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தேர்வு கட்டணத்தை 100 ரூபாயாக உயர்த்தி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.