காஞ்சிபுரம் பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.