தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களின் சிறந்த பொருட்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அங்காடியில் தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.கைத்தறி சேலைகள், வீடுகளில் செய்த வத்தல், வடகம், உலர் திராட்சை, தானிய வகைகள் மற்றும் ரவா லட்டு, பால்கோவா போன்ற இனிப்பு வகைகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.