பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது குறித்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவதற்கான வழிமுறைகளை தீயணைப்புத் துறையினர் வழங்கினர். அப்போது, ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், எப்படி முன் ஜாக்கிரதையாக இருப்பது, நீளமான ஊதுபத்தியை பயன்படுத்தி வெடியை பற்ற வைக்க வேண்டும், தீ விபத்து ஏற்பட்டால் துரிதமாக செயல்பட்டு அணைப்பது, இறுக்கமான உடைகளை அணிவதால் தீ உடம்பில் பரவும் தாக்கம் குறையும், பருத்தியினால் ஆன ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளை மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்புத் துறையினர் வழங்கினர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக செயல் விளக்கமும் தந்தனர்.