நாமக்கல் மாவட்டம் அத்தனூர் கிராமத்தில் ஏழை மக்கள் 9 பேருக்கு வீடு கட்ட உதவிய பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, நன்றி தெரிவித்த கிராம மக்கள், ஆரத்தி எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 11 மாணவ மாணவிகள் தங்களது ப்ராஜெக்ட் பணிக்காக, அத்தனூர் கிராமத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் 9 பேருக்கு தங்கள் சொந்த செலவில் வீடு கட்டி தரவுள்ளனர்.