நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 40-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை தேனீக்கள் கொட்டிய நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காக்காவேரி பகுதியில் உள்ள முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல கல்லூரிக்கு வந்த மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கிய போது, அவர்களை சூழ்ந்து கொண்டு தேனீக்கள் கொட்டின. மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச்சென்ற கல்லூரி நிர்வாகத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், மரக்கிளையில் இருந்த தேனீக்களை அகற்றாமல் கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாலேயே மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.