பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி,மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெயேறும் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளிலும், விளை நிலங்களுக்குள்ளும், புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதோடு, வீட்டு விலங்குகளையும் தாக்கி வருகின்றன. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வன கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான பசுக்கிடைவிளை பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இச்சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் இரவு நேரங்களில் இரண்டு கரடிகள் ஜோடியாக குடியிருப்புகளுக்குள் நுழைந்து சுற்றித் திரியும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கரடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : இளம் பொறியாளர் பலியான விவகாரம்