கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் 9 நாட்களுக்கு பிறகு கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி 9 நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனிடையே அணை நீர் வெளியேற்றம் வினாடிக்கு 200 கன அடியாக குறைக்கப்பட்டதால் இரண்டு பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் நீராடி உற்சாகமடைந்தனர்.