கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே செம்மண் குவாரியில் தேங்கி இருந்த நீரில் மூழ்கி பள்ளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிவானந்தத்தின் இளைய மகனான சஞ்சீவி, நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், சஞ்சீவி தனியார் செம்மண் குவாரி பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் குளிக்க சென்றபோது மூழ்கி உயிரிழந்தான்.