குமரி மாவட்டம் திற்பரப்பு அருவில் குளிப்பதற்கு தடை நீடிப்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விதித்த தடை 8-வது நாளாக நீடிக்கிறது. இந்த நிலையில், திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கம்பி வேலிக்குள் நின்று ஆர்பரித்து கொட்டும் அருவியை கண்டு ரசித்தனர்.