மதுரையில் நண்பர்களின் சண்டையை விலக்கி விட்டவரை தாக்கி காதை கிழித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பெரியார் பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தர்ஷன் என்கிற இளைஞரை அவரது நண்பர்கள் சரவணன் மற்றும் கோபி ஆகியோர் சேர்ந்து தாக்கினர். இதைக் கண்ட செல்வராஜ் என்பவர், சண்டையை விலக்கி விட்டபோது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சரவணனும், கோபியும் சேர்ந்து கையில் அணிந்திருந்த இரும்பு காப்பால் செல்வராஜை தாக்கி காதை கிழித்துள்ளனர்.அவ்வழியாக ரோந்து சென்ற போலீஸார் செல்வராஜிடம் விசாரணை நடத்தி, 3 இளைஞர்களையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிந்து, அபராதம் விதித்தனர்.