திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகைத் தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 3.30 மணி அளவில் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.