சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க இடைக்கால தடை விதித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 118 ஏக்கர் நிலத்தில் ஏரி அமைக்காதது ஏன்? என்ற கேள்விக்கு தலைமைச் செயலாளர் பதிலளிக்காததால், அவர் அறிக்கை தாக்கல் செய்யும் வரை பசுமை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.