கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளதால் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளில், கோடை காலம் முடியும் வரை கேம்ப் ஃபயர் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்கு கொண்டு செல்லவும், காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காய்ந்த விவசாய மிச்சங்களை எரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி இந்த தடை உத்தரவை பிறப்பித்தார்.