சென்னை ஆலந்தூரில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்தை வரவேற்பதற்காக 15 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட பேனர் வைத்த அக்கட்சியினரை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பெரிய பேனர் வைக்க அனுமதி இல்லை எனக் கூறி அப்புறப்படுத்தினர்.