கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பேனர், நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியால் உடனடியாக அகற்றப்பட்டது. அரசு அலுவலக வளாகத்தில் அரசு அலுவலர் ஒருவருக்கு பிறந்த நாள் விழா பேனர் வைக்கப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை அடுத்து, ஒரு மணி நேரத்திலேயே அந்த பேனர் அகற்றப்பட்டது.