தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சுப முகூர்த்த நாளை முன்னிட்டு ஒரு கட்டு வாழை இலை 4 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனதால், விழாக்களுக்கு இலை வாங்க சென்ற மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வாழை விவசாயம் அதிகமாக செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுப முகூர்த்தம் காரணமாக வாழை இலை விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த இலைக் கட்டு தற்போது 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆவதாக கூறப்படுகிறது. இதனால் விழாக்களை நடத்தும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.