தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் வரலாறு காணாத அளவில் வாழை இலை விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்டது.தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வாழை அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது.சுப முகூர்த்த தினங்கள் அதிகம் இருந்ததால் ஒரு வாரமாக 180 மடிகள் கொண்ட வாழை இலையின் கட்டு 3 ஆயிரம் ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. இந்நிலையில், புதிய உச்சமாக 180 இலைகள் கொண்ட ஒரு வாழை இலை கட்டு 5,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.