தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை பயிர்கள் கருகி வரும் நிலையில், திருவைகுண்டம் அணை வடகால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவைகுண்டம் அணை வடகால் பாசனத்தில் ஏரல், கெற்கை, லெட்சுமிபுரம், உமரிக்காடு, முக்காணி, பேய்குளம், கூட்டாம்புளி உள்ளிட்ட பகுதிகளில் வாழை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் இன்றி கருகி வருகிறது. இதனால் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.