சீன லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு உறுதுணையாக இருந்த திமுக எம்பி கனிமொழியை நேரில் சந்தித்து, கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் தங்கள் தொழிலை பாதுகாக்கின்ற வகையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.