தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் மற்றும் ஐந்தருவியில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.