கோவையில் ஆவின் உணவு தின்பண்டங்கள் விற்பனையகத்தில் காலாவதியான பால்கோவா, மைசூர் பாக் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது ஊழியர் அலட்சியமாக பதிலளித்த வீடியோ வெளியாகி உள்ளது. பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் ஆவின் விற்பனையகத்தில் வாடிக்கையாளர் வாங்கிய பால்கோவா மற்றும் மைசூர் பாகை திறந்து பார்த்தபோது பூஞ்சை பிடித்து கெட்டுப் போயிருந்தது தெரியவந்தது.