சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஸ்ரீபால கிருஷ்ண பெருமாள், வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்வு நடைபெற்றது. பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 127வது சித்திரை பெருவிழா மே 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான பெருமாள் அற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா முழக்கத்திற்கு மத்தியில், தங்க நிற குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி பாலகிருஷ்ண பெருமாள், ஆற்றில் இறங்கினார்.