நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கெட்டுப்போன ஸ்வீட் பப்ஸ் விற்பனை செய்ததாக பேக்கரிக்கு பூட்டுப்போட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர். குளத்துக்காடு பகுதியை சேர்ந்த செல்வகுமார், நேற்று மாலை பேக்கரியில் ஸ்வீட் பப்ஸ் வாங்கி சென்று தன் குழந்தைக்கு கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட குழந்தை வாந்தி எடுத்ததால், பப்ஸை சோதனை செய்தபோது அது கெட்டுப்போய் இருந்துள்ளது. இதுகுறித்து பேக்கரிக்கு சென்று கேட்டபோது, உரிமையாளர் சரியான பதிலை சொல்லாததால், செல்வகுமார் உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அதிகாரிகள் சோதனை செய்ததில் விற்பனைக்கு இருந்த ஸ்வீட் பப்ஸ் எல்லாமே பூஞ்சை பிடித்த நிலையில் இருந்தது தெரியவந்தது.