திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பஜாஜ் டோமினார் பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. உலுப்பகுடியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் தனது பஜாஜ் டோமினார் பைக்கில் நத்தத்திலிருந்து சென்றபோது சேர்வீடு பிரிவு அருகே ரேடியேட்டர் திடீரென வெடித்து புகை கிளம்பியது. பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கிய சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் பைக் முழுவதும் எரிந்து சேதமானது.