ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மூவரின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இவ்வழக்கில் கைதான விக்னேஷ்குமார், விஜயகுமார், சதீஷ்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், தள்ளுபடி செய்யப்பட்டது.