பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.இதுவரை வழக்கறிஞர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய நபரான சம்போ செந்தில் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் கூறியுள்ள அருண், குற்றச்செயலில் மூலமாக சம்பாதித்த சொத்துக்களை முடக்க முடிவு செய்துள்ளதாகவும், கைதானவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.