எல்ஐசி தீ விபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த வழக்கில் பகீர் திருப்பம். பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தீ விபத்து என நாடகம். மகன் கொடுத்த க்ளூவால் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள். மேலாளர் தனது மகனிடம் போலீஸுக்கு ஃபோன் செய் என பதற்றத்துடன் கூறியபோது, திடீரென கட்டான செல்போன் அழைப்பு. திடீரென செல்போன் அழைப்பு கட்டானது ஏன்? அதன் பின்னணியில் யார்? மேலாளர் கல்யாணிக்கு அலுவலகத்தில் நடந்த கொடூரம் என்ன?LIC அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்துமதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதி, வழக்கத்தவிட, சனிக்கிழமை நைட்டு ஒரு பதற்றம் நிறைஞ்ச பகுதியா காணப்பட்டுச்சு. ஏன்னா, அந்த ஏரியாவுல செயல்பட்டு வர LIC ஆஃபிஸ்ல ஏற்பட்ட பயங்கர தீ விபத்துதான் அந்த பதற்றத்துக்கே காரணம். அந்த ஆஃபிஸ்ல, அசிஸ்டட்ண்ட் மேனேஜர் வேலை பாத்துட்டு இருந்த ராம்-ங்குறவரு காலுல தீக்காயங்களோட ரோட்டுக்கு ஓடி வந்துருக்காரு. அத பாத்து அதிர்ச்சியான மக்கள் சிலர், உடனே அவர மீட்டு பக்கத்துல உள்ள பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல சேத்துருக்காங்க. அடுத்து, தகவல் தெரிஞ்சு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ்காரங்களும், தீயணைப்புத்துறையினரும் நீண்ட நேரம் போராடி தீய அணைச்சிருக்காங்க.சடலமாக கிடந்த பெண் மேலாளர் கல்யாணி ஊழியர் ராம் தீ விபத்துல இருந்து நேக்கா வெளியேறி உயிர் பிழைச்சிட்டாருன்னு சந்தோஷப்பட்ட போலீஸ்காரங்க, அந்த ஆஃபிஸுக்குள்ள போய் ஆய்வு பண்ணிட்டு இருந்துருக்காங்க. அப்ப, அங்க இருந்த ஒரு அறையில 55 வயசு மதிக்கத்தக்க ஒரு பெண் தீயில கருகி கரிக்கட்டையா கிடந்தத பாத்து போலீஸ்காரங்க ஒரு நிமிஷம் ஷாக்காகி நின்னுருக்காங்க. அந்த பெண் வேற யாரும் இல்ல அந்த ஆஃபிஸோட மேனேஜர் கல்யாணி. உடனே சடலத்த கைப்பற்றி போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வைக்கிற வேலையில இறங்குனாங்க போலீஸ். அப்போ, தாய் கல்யாணி ஃபயர் ஆக்சிடண்ட்ல சிக்கி உயிரிழந்துட்டாங்க-ங்குற செய்திய கேட்டதும் மகன் லட்சுமி நாராயணன் பதறியடிச்சிட்டு ஓடிவந்துருக்காரு. பெத்து வளத்து ஆளாக்குன தாய் தீயில கருகிப்போய் கரிக்கட்டையா கிடந்த கோலத்த பாத்ததும் துடிதுடிச்சு போயிட்டாரு லட்சுமி நாராயணன்.தாய் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்ஒருவழியா கல்யாணி சடலத்த மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்ச போலீஸ், விசாரணையில இறங்குனாங்க. அலுவலகத்துல ஏற்பட்ட மின்கசிவாலதான் இந்த தீ விபத்து ஏற்பட்டுருக்குன்னு நினச்ச போலீஸ், அந்த கோணத்துல விசாரணைய ஆரம்பிச்சாங்க. இதுக்கு நடுவுல, கல்யாணியோட மகன் லட்சுமிநாராயணனுக்கு தன்னோட தாய் மரணத்துல பல சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கு. ஏன்னா, தீ விபத்து நடந்தப்ப, ராமும், கல்யாணியும் மட்டும்தான் ஆஃபிஸ்ல இருந்தாங்க. ஃபயரான சில நிமிடங்களேயே வெளியே ஓடிவந்த ராம், கல்யாணி ஆஃபிஸுக்குள்ள இருக்குற விஷயத்த வெளியே இருந்தவங்கக்கிட்ட சொல்லிருந்தா, அவங்கள எப்படியாவது காப்பாத்திருக்கலாம். அவரு ஏன் கல்யாணி உள்ள இருக்குற விஷயத்த யார்கிட்டையும் சொல்லல்ல?லட்சுமி நாராயணன் அளித்த புகாரின்பேரில் விசாரணைஇன்னொன்னு, கல்யாணி சடலமா கிடந்த அறை உள் பக்கமா தாழ்பாள் போட்டிருந்ததோட, சில ஆவணங்களும் கீழ சிதறி தீயில எரிஞ்சிருந்துருச்சு. இது எல்லாத்தையும் விட இந்த தீ விபத்து நடக்குறதுக்கு 15 நிமிஷத்துக்கு முன்னாடிதான் கல்யாணி, லட்சுமிநாரயணனுக்கு ஃபோன் பண்ணி என்ன ஏதுன்னு சொல்லாம போலீஸுக்கு ஃபோன் செய்ன்னு சொல்லிருக்காங்க. ஆனா, பேசிட்டு இருக்கும்போதே அவங்களோட செல்போன் கட்டாகிருச்சு. அதுக்குப்பிறகு, லட்சுமி நாராயணன் மறுபடியும் ஃபோன் பண்ணப்ப கல்யாணியோட செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வந்துருக்கு. இந்த விஷயங்கள் எல்லாத்தையும் லட்சுமிநாராயணன் போலீஸ்கிட்ட சொல்லவே, சந்தேக மரணம்னு வழக்குப்பதிவு செஞ்ச திலகர்திடல் காவல்துறையினர் புலன் விசாரணையில இறங்குனாங்க. அதன்படி, ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட்ல இருந்த ராம்கிட்ட நேர்ல போய் கிடுக்குப்பிடி விசாரணை பண்ணப்பதான், அது விபத்து இல்ல கொலை அப்டிங்குறது தெரியவந்து எல்லாரையும் அதிர வச்சிருக்கு.DEATH CLAIM பாலிசி கொடுப்பதில் முறைகேடு செய்த ராம்அதுக்குப்பிறகு, ஆக்சிடண்ட் கேஸ மர்டர கேஸா ஃபைல் பண்ண போலீஸ்காரங்க, ராம கஸ்டடியில எடுத்து விசாரணை நடத்துனாங்க. அதுலதான், இந்த கொலைக்கான மோட்டிவ் என்னங்குறதுக்கான முழுக்காரணமே தெரியவந்துச்சு. சீனியர் மேனேஜரான கல்யாணி கடந்த மே மாசம் நெல்லையில இருந்து ஃபுரோமோஷன் கிடைச்சு மதுரைல உள்ள LIC அலுவலகத்துல வேலைக்கு சேந்துருக்காங்க. அதே அலுவலகத்துல, 45 வயசான ராம் கடந்த ஒன்றரை வருஷமா அசிஸ்டட்ண்ட் மேனேஜரா வேலை பாத்து இருந்துருக்காரு. இவரு, சில டாக்யூமெண்ட்ஸ்ல ஃபோர்ஜிரி வேலை பாத்துருக்குறதாவும், டெத் கிளைம் பாலிசி கொடுக்காம வாடிக்கையாளர்கள அலைக்கழிச்சிட்டு இருந்ததா இவரு மேல அடுக்கடுக்கா நெறைய புகார்கள் வந்துட்டே இருந்துருக்குது. அவரால பாதிக்கப்பட்டவங்க சிலர், மேனஜர் கல்யாணிக்கிட்ட போய் கம்பளைண்ட் பண்ணிருக்காங்க.பெட்ரோல் ஊற்றி ஆவணங்களை எரித்த ராம்உடனே, அவங்க ராம கூப்பிட்டு எச்சரிச்சதோட, அவங்களோட டாக்யூமெண்ட்ஸ் எல்லாத்தையும் வாங்கி செக் பண்ணிருக்காங்க. அதுல, ராம், சில முறைகேடுகளையும், குளறுபடிகள் பண்ணிருக்குறதையும் பாத்து கொந்தளிச்சு போனவங்க சரமாரியான கேள்விகள கேட்டுருக்காங்க. அது, ராமுக்கு உச்சகட்ட கோபத்த ஏற்படுத்திருக்கு. இப்ப வந்துட்டு நமக்கே கண்டிஷன் போட்றாளேன்னு கல்யாணி மேல கொலைவெறில இருந்துருக்கான் ராம். இந்த ஃபோர்ஜிரி வேலைய அவங்க உயர் அதிகாரிகள் கிட்ட சொல்லிட்டா வேலையே போயிடும்னு பயந்து, சம்பவத்தனைக்கு ஊழியர்கள் எல்லாரும் ஆஃபிஸ்ல இருந்து வீட்டுக்கு கிளம்புனதும், தான் முறைகேடு பண்ண ஆவணங்கள பெட்ரோல் ஊத்தி எரிச்சிட்டு இருந்துருக்கான்.கல்யாணியை கீழே தள்ளி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த ராம்அப்போ, திடீர்னு அங்க வந்த கல்யாணி, ஆவணங்கள் தீயில எரிஞ்சிட்டு இருந்தத பாத்ததும் ராம, சரமாரியா கேள்வி கேட்டு திட்டிருக்காங்க. அவங்கள பாத்ததும் பதட்டமான ராம் என்ன பண்றதுன்னு தெரியமா திருதிருன்னு முழிச்சப்படி நின்னுட்டு இருந்துருக்கான். அப்போ, தன்னோட மகனுக்கு ஃபோன் பண்ண கல்யாணி, உடனே போலீஸுக்கு ஃபோன் பண்ணுடான்னு ஒரு வார்த்தைதான் சொல்லிருக்காங்க. உடனே அவங்களோட ஃபோன பிடுங்கி ஸ்விட்ச் ஆஃப் பண்ணவே, ரெண்டு பேத்துக்கும் இடையில கடும் வாக்குவாதம் ஏற்பட்டுருக்கு. அப்போ, திடீர்னு அவங்க இருந்த அறையோட கதவ தாழ்பாள் போட்டு, கல்யாணிய கீழ தள்ளிவிட்டு, அவங்க மேல பெட்ரோல ஊத்தி நெருப்ப கொளுத்தி போட்டுருக்கான். அதுல, அவங்களோடு உடம்பு முழுக்க தீ மளமளன்னு பற்றி எரிஞ்சிருக்கு. அந்த தீ ராமோட கால் பகுதியிலையும் லேசா பட்டதால, அங்க இருந்து தப்பிச்சு வெளியே ஓடி வந்த ராம், அங்க இருந்த மக்கள்கிட்ட திடீர்னு ஃபயராகிடுச்சுன்னு சொல்லிருக்கான். அப்போ, அங்க இருந்த சிலர், உள்ள வேற யாராவது சிக்கிருக்காங்களான்னு கேட்டதுக்கு யாரும் இல்ல, நான் மட்டும்தான் தனியா இருந்தேன்னு பொய் சொல்லிருக்கான். விசாரணையில, ராம் ஒன்னுவிடாம வாக்குமூலத்துல சொல்லவே, அவன் மேல கொலை வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ் அவன அரெஸ்ட் பண்ணி தொடர்ந்து விசாரணை நடத்திட்டு இருக்காங்க. இதையும் பாருங்கள் - சிதைக்கப்பட்ட சிறைப்பறவை